cinema

img

14 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் படம்!  

நேற்று வெளியான குழந்தைகள் திரைப்படத்திற்கு 14 நாடுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

1995 ஆம் ஆண்டு டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் டாய் ஸ்டோரி சீரிஸ் அனிமேஷன் திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்த பாகமான 'லைட் இயர்' என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு துபாய், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தன்பாலின முத்தக்காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும், இது அரபு நாட்டின் நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளது எனக் கூறியும் 'லைட் இயர்' படத்திற்கு தடை விதித்துள்ளது.    

முஸ்லிம் நாடுகளில் தன் பாலின ஈர்ப்பு என்பது மத நம்பிக்கைக்கு எதிரானதாக கருதுகின்றனர். மேலும் குற்றமாகவும் பார்க்கப்படுகின்றனர். எனவே அந்தக் காட்சிகளை நீக்கினால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதிக்கப்படும் என அந்நாடுகள் தெரிவித்ததாகவும், அதற்கு படக்குழுவினர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த நாடுகளில் படம் வெளியாகவில்லை. அமெரிக்காவிலும் இத்தகைய காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.